பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் இராஜினாமா!
பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடும் நெருக்கடி காரணமாக பிரிட்டனின் புதிய பிரதம மந்திரி லிஸ் ட்ரஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
தனது ராஜினாமாவை அறிவித்த பிரதமர், “கன்சர்வேடிவ் கட்சியால் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையை என்னால் வழங்க முடியாது என்பதை நான் அங்கீகரிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கடும் நெருக்கடி நிலை
நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக லிஸ் டிரஸ் அறிவிக்கப்பட்டார். டிரஸ்சின் அமைச்சரவையில் கடந்த 14ம் திகதி நிதி மந்திரி பதவியில் இருந்து குவாசி வார்தெங் நீக்கப்பட்டு, ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.
ஒரு வாரத்திற்குள் டிரஸ்சின் அமைச்சரவையில் 2வது மந்திரி பதவியில் இருந்து விலகி சென்றுள்ளார். அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடித்து வரும் சூழலில் அமைச்சரவையில் இருந்து பெண் மந்திரி வெளியேறி உள்ளார்.
இந்த சூழலில், இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் இந்திய வம்சாவளி பெண் மந்திரி பிரேவர்மென்னை தொடர்ந்து, முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியுள்ளனர்.
அரசில் தலைமை பதவி வகிக்கும் வெண்டி மோர்ட்டன் மற்றும் துணை கொறடாவான கிரெய்க் விட்டேக்கர் ஆகியோர் பதவி விலகி உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் லிஸ் டிரஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேவேளை பிரதமர் லிஸ் டிரஸ் பதவியேற்ற இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலப்பதியிலேயே அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.