பிறந்தது 7 வது குழந்தை: மகிழ்ச்சியில் பிரித்தானிய பிரதமர் போரிஸ்
பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) மற்றும் கேரி தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தது,
"இன்று முன்னதாக லண்டன் வைத்தியசாலையில், ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்ததை அறிவிப்பதில் பிரதமரும் திருமதி ஜான்சனும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேவேளை, அம்மா, மகள் இருவரும் நன்றாக இருப்பதாகவும், NHS குழுவின் கவனிப்புக்கும் ஆதரவிற்கும் நன்றி" என தெரிவித்தார். பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்த குழந்தையுடன் சேர்த்து குறைந்தது 7 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போதைய மனைவி கேரியுடன் இரண்டு குழந்தைகள், இரண்டாவது மனைவி மரீனாவுடன் 4 குழந்தைகள் மற்றும் மற்றோரு பெண்ணுடன் குறைந்ததது ஒரு குழந்தை இருக்கலாம் என கூறப்படுகிறது.