பிரித்தானியாவின் பணக்கார விவாகரத்து...வெளியான வியக்கத்தகு தகவல்
பிரித்தானியா அழகியும் பிரபல படகியுமான கிறிஸ்டி பெர்டரெல்லி அவர்கள் பிரித்தானியாவின் பணக்கார விவாகரத்து பெற்ற நபராகியுள்ளார்.
கிறிஸ்டி பெர்டரெல்லிஅவர்கள் பிரிட்டனின் ஸ்டாபோட்ஷயற்றில் பிறந்த பெண்ணாவார். இவரை பிரித்தானியாவின் அழகி படத்தை 1988ம் ஆண்டில் பெற்றார். அதனை தொடர்ந்து லண்டன் மாகாணத்தில் குடியேறிய கிறிஸ்டி தனது பயணத்தை பாடகராகாவும், படலாசிரியராகவும் பயணத்தை தொடர்ந்தார். அதன் மூலமாக மிகவும் பிரபலமும் அடைந்தார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு இத்தாலிய வம்சாவளியை சேர்ந்த சுவிஸ் தொழில் அதிபரான ஏனெர்ஸ்டோ பெர்டெரெல்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் நடைபெற்றபோது ஏனெர்ஸ்டோ பெர்டெரெல்லி உலக பணக்காரர்களில் ஒருவராக இருந்தார். இதன் காரணமாக அவரை திருமணம் செய்து கொண்ட கிறிஸ்டி பிரித்தானியாவின் பணக்கார பெண்ணாக மாறினார். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. தற்போது கிறிஸ்டிக்கு 50 வயதாகிறது.
சமீபத்தில் தான் இவர்களது 21 ஆம் ஆண்டு திருமண நிகழ்வு உலகம் வியக்கும் வகையில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது இருவரும் விவாகரத்து செய்ததாக மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர். இந்த முடிவானது ஓரிரு மாதங்களுக்கு முன்பே தீர்மானித்துவிட்டதாக இருவரும் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு வெளியான உலக பணக்கார பட்டியலில் இந்த தம்பதியினர் 14 வது இடத்தைப் பிடித்திருந்தனர்.
இவர்களது சொத்து மதிப்பு சுமார் 9.2 பில்லியன் பவுண்டாகும். இந்த தொகையானது பல நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் மிகப்பெரிய தொகையாகும்.
தற்போது கிறிஸ்டி விவாகரத்து பெற்றதற்காக ஏனெர்ஸ்டோவிடமிருந்து செட்டில்மண்ட் தொகையாக 350 மில்லியன் பவுண்டுகளைப் பெறுகிறார்.
இதன் வாயிலாக கிறிஸ்டி பிரித்தானியாவின் பணக்கார விவாகரத்து பெற்ற பெண்ணாக மாறிவிட்டார்.