திருமணம் முடிந்த 4 மாதங்களில் புது மணப்பெண் செய்த விபரீதம் ; கணவர் கைது
சென்னை தாம்பரம் அருகே, படப்பையில் திருமணமான4 மாதங்களேயான புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவர் மணிமங்கலம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தம்பதியினருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.

தகராறு
திருமணத்திற்குப் பிறகு கணவர் , தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
அடிக்கடி செல்போனை வாங்கி, யார் யாரிடம் எல்லாம் பேசியுள்ளார் என சோதனை செய்து, கடுமையான வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மணிமங்கலம் பொலீசார் தற்போது பெண்ணின் கணவர் தீபக்கை கைது செய்துள்ளனர்.
அவர்மீது தற்கொலைக்குத் தூண்டுதல், மனரீதியான கொடுமை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.