இலங்கையில் இந்த நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! அதிர்ச்சி தகவல்
மார்பு புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஏனைய நாடுகளை விடவும் இலங்கையில் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த தகவலை தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் ஹசாரெலி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர்,
நாட்டில் ஆண்டுதோறும் 50,500 பெண்களும் 125 ஆண்களும் மார்பு புற்றுநோயுடன் அடையாளம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மார்பு புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகாரித்துள்ளது.
இதேவேளை, மார்பு புற்றுநோயால் பாதிக்கப்படுகின்ற ஆண்கள் அதிகளவில் மரணிப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் ஹசாரெலி பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார்.