யாழில் ஆபத்தான படகு பயணம்... மீட்கப்பட்ட சிறுவர்கள்! மதுபோதையில் குடும்பஸ்தர்
யாழில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட மூவரை இலங்கை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.
மயிலிட்டி கடல் பகுதியில் நேற்று முன்தினம் (27) குடும்பஸ்தர் ஒருவர் தனது இரண்டு வயது பிள்ளையையும், தனது சகோதரியின் 7 வயது மகளையும் படகில் ஏற்றி கடலில் ஆபத்தான முறையில் படகை செலுத்தியுள்ளார்.
அதன்போது, படகினுள் கடல் தண்ணீர் உட்புகுந்ததுடன், படகில் இருந்த சிறுவர்களும் பயத்தில் கத்தியுள்ளனர்.
அதனை கடலில் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் பார்வையிட்டு, அவ்விடத்திற்கு விரைந்து படகிலிருந்து சிறுவர்களை மீட்டதுடன், படகினை கரைக்கு செலுத்துமாறு குடும்பஸ்தருக்கு உத்தரவிட்டனர்.
கரை சேர்ந்த குடும்பஸ்தரை கடுமையாக எச்சரித்த கடற்படையினர், இரு சிறுவர்களையும் கரையில் பாதுகாப்பாக சேர்ந்தனர்.
இதேவேளை படகை கடலில் செலுத்திய குடும்பஸ்தர் மது போதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.