கொழும்பில் பொலிஸாரின் கண்ணீர்ப்புகையால் கதறி அழுத சிறுவன்; பரபரப்பு வீடியோ!
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டதில் ஆர்ப்பாட்டத்தில் ஈருபட்டவர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அங்கிருந்த 7 வயது மதிக்கத்த சிறுவன் ஒருவரும் பொலிஸாரின் கண்ணீர்ப்புகை பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் அச்சிறுவன் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அங்கிருந்தவர்களால் குறித்த சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாகவும் தெரியவருகின்றது.