மாணவர்களுக்கு குப்பிவிளக்கு ; அதிகாரி இராஜினாமா
மாணவர்கள் குப்பிவிளக்கு போன்றவற்றை பயன்படுத்தி கல்விகற்கபழகவேண்டும் என கருத்து தெரிவித்த இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த பதவி விலகியுள்ளார் .
மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த பதவி விலகியமையினை அமைச்சர் காஞ்சன விஜயசேகர உறுதி செய்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
பதவி இராஜினாமா
இலங்கை மின்சாரசபையின் பேச்சாளரின் கருத்துக்களில் தொழில்சார் தன்மையோ அல்லது இரக்கமோ கருணையோ இல்லாததை அமைச்சர் தொண்டமான் உட்பட பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். மின்சாரசபை பேச்சாளரின் கருத்துக்கள் இலங்கை மின்சாரசபையினதோ அல்லது அரசாங்கத்தினதோ நிலைப்பாடுகளை பிரதிபலிக்கவில்லை அவரின் கருத்துக்காக நான் அமைச்சு மற்றும் மின்சாரசபையின் சார்பில் மன்னிப்கோருகின்றேன் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
அதேசமயம் பேச்சாளர் தனது பதவியை இராஜினாமா செய்து தனது கருத்துக்களிற்காக பொதுமன்னிப்பு கோரியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.