இருவருமே மேயர்கள்; ஒருவர் பசியாறச்சென்ற குழந்தைகளை மண்டியிட வைத்தார்; மற்றவர் நெகிழவைத்தார்
பசியாறச்சென்ற பாடசாலை மாணவர்களை வெலிகம நகர மேயர் அவர்களை மண்டியிட வைத்த நிலையில், வெலிகம முன்னாள் மேயர் ரெஹான் ஜயவிக்ரம அந்த குழந்தைகளுக்கு ருசியான மதிய உணவை வழங்க ஏற்பட்டு செய்ததாக கூறப்படுகின்றது.
வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்ற திருமண விருந்தொன்றில் அழையா விருந்தாளிகளாக உணவு உண்ண முற்பட்டதாக கூறப்படும் ஐந்து பாடசாலை மாணவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வெலிகம நகரசபையைச் சுற்றி வசிக்கும் 12, 13, 16, 17 வயதுடைய ஐந்து மாணவர்களே இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து வெலிகம மேயரால் அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிசார் மாணவர்களை அழைத்து சில மணித்தியாலங்களின் பின்னர் விடுவித்ததாக வெலிகம காவற்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
மாணவர்கள் கலக்கம்
இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் கூறுகையில் , “அந்த திருமணங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு அவர்கள் சமைக்கிறார்கள். மிச்சம் சாப்பிடுவதற்கு முன்பு அங்கு சென்றிருக்கிறோம்.
சமைத்துக்கொண்டிருந்த ஒரு மாமாதான் எங்களை வந்து சாப்பிடச் சொன்னார்.அதன்படி நாங்கள் ஐந்து பேரும் கிளம்பியபோது அங்கிருந்த ஒருவர் கொஞ்சம் பொறுங்கள் என்றார். இதற்கிடையில் மேயரும் இன்னும் சிலரும் வந்து எங்களை திட்டிவிட்டு படிக்கட்டுக்கு அருகில் மண்டியிடச் சொன்னார்கள்.அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் அப்போது மிகவும் அவமானமாக உணர்ந்தோம். சிறிது நேரம் கழித்து போலீசார் வந்து அழைத்துச் சென்று , மூன்று மணி நேரம் பின், பெற்றோரிடம் ஒப்படைத்2ததாகவும் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெலிகம மேயர் திருமதி யமுனா காந்தி ,
குறித்த நபர்கள் சிறுவர்கள் அல்ல எனவும், பலவந்தமாக உணவை கொள்ளையடிக்க வந்த குழு எனவும் கூறியயதாக தெரிவிக்கபப்டுகின்றது.
நெகிழவைத்த முன்னாள் மேயர்
அதேவேளை இச்சம்பவத்தை எதிர்கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு ருசியான மதிய உணவை வழங்குவதற்கு வெலிகம முன்னாள் மேயர் திரு.ரெஹான் ஜயவிக்ரம ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.