கொழும்பில் போலி கல்வி நிலையம் நாடத்தி வந்த இளம் பெண்ணுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
கொழும்பில் போலியான பட்டப்படிப்புப் பாடநெறிகளை வழங்குவதாக மோசடியில் ஈடுபட்ட கல்வி நிலையம் ஒன்றை நடாத்தி வந்த பெண்ணை பொலிஸார் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன்படி, குறித்த பெண் இன்று (05) புதுக்கடை இலக்கம் 03 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு, பாடநெறிகளை வழங்குவதாகக் கூறி கல்வி நிலையத்தை போலியாக மோசடி செய்து நடாத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கிரிஉல்ல - நாராங்கமுவ பகுதியை சேர்ந்த 24 வயதான இளம் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கல்வி நிலையத்தின் மீது வழங்கப்பட்ட முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கடந்த நவம்பர் 27 ஆம் திகதி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இதன் போது கொழும்பு பம்பலப்பிட்டி லொரீஸ் வீதியிலுள்ள ‘எவல்வ் காலேஜ் ஆஃப் எஜுகேஷன் ’ (Evolve College of Education) இல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அதாவது, குறித்த நிறுவனத்திற்கு எதிராகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிற்கு எதிராகவும் 43 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 100 இற்கும் அதிகமானோர் மோசடியில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், கல்வி நிலையத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனை கைது செய்ய பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.