சவூதியில் அனுஜனின் மரண தண்டனை; மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனுஜனின் விடுதலைக்குத் தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, ராமாஞ்ஞ மற்றும் அமரபுர பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ராமாஞ்ஞ பீடத்தின் மகாநாயக்கர் மகுலேவே விமல நாயக்க தேரர் மற்றும் அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி தேரர் ஆகியோர் சார்பில் குறித்த கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை, சிவராசா அனுஜனின் விடுதலை தொடர்பில் இந்து மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இந்து குருமார் சங்கத்தின் தலைவரும் அகில இலங்கை இந்து கலாசார சபையின் தலைவருமான சிவாஸ்ரீ கே.வி.கே. வைதீஸ்வர குருக்களாலும் அண்மையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது