மகாவலி கங்கையில் சேற்றில் புதைந்த நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு
கண்டி பேராதனையில் உள்ள புதிய கெட்டம்பே பாலத்திற்கு அருகிலுள்ள மகாவலி கங்கையில் இளம் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அந்தப் பெண் பாலத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை 16 அதிகாலை குதித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் குறித்த பெண் கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு பை பாலத்தின் மேலே இருந்து கண்டெடுக்கப்பட்டு பொலிஸாரின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் சடலம் சேற்றில் புதைந்துள்ளதால், சடலம் நீரில் அடித்துச் செல்லப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.