காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட ஆண் சிசுவின் சடலம்; பெண்ணை தேடும் பொலிஸார்
மட்டக்களப்பு - சந்திவெளி மொறக்கொட்டான்சேனை காட்டை அண்டிய பகுதியில், வீசப்பட்ட நிலையில், ஆண் சிசுவின் சடலம் இன்று (15) காலையில் மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 9 மணியளவில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.
பெண்ணை தேடும் பொலிஸார்
சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சடலமாக மீட்கப்பட்ட சிசு இன்று பிறந்துள்ளதாகவும் சிசுவை பெற்றெடுத்து வீசிய பெண்ணை தேடிவருவதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.