இலங்கையில் தாய்லாந்து நாட்டவர் செய்த மோசமான செயல்
3 கிலோகிராம் ஹெராயினுடன் தாய்லாந்து நாட்டவர் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் கிரிபத்கொட பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது இது இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருட்கள்
பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 06 இலட்சம் என தெரிவிக்கப்படுகின்றது.
துபாய் நாட்டில் மறைந்திருக்கும் 'துபாய் தில்ருக்' என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் இந்த போதைப்பொருள் இந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாய்லாந்து நாட்டவர் வழியாக விமானம் மூலம் போதைப்பொருள் நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.