குழந்தை வரம் இல்லாதவர்கள் ஆடி செவ்வாயில் இவ்வாறு வழிபடுங்கள்
அம்மனை வழிபட்டு, வரங்கள் பெறுவதற்கு மிகவும் ஏற்ற நாள் ஆடி செவ்வாய் ஆகும். இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் வீட்டில் சுபிட்சம் ஏற்படும்.
ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் ஆடி செவ்வாயில் வழிபடுவதால் அம்மன் அருளால் அவை விலகும். திருமணம் தடை போன்ற சுப காரிய தடைகள் அனைத்தும் நீங்கி விடும்.
குழந்தை வரம் வேண்டுபவர்களும் ஆடி செவ்வாயில் அம்மனை வழிபடலாம்.
வாழை இலை அல்லது வெற்றிலையை வைத்து அம்மனுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து அந்த குங்குமத்தை 11 சுமங்கலி பெண்களுக்கு வழங்குவது நல்லது.
மங்கல காரியங்கள் நடப்பதற்கு மட்டுமின்றி தீராத கடன் பிரச்சனை தீருவதற்கும் ஆடி செவ்வாயின் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது சிறப்பான பலனை தரும்.
ஆடி மாத வழிபாடு
ஆடி மாதத்தின் அனைத்து நாட்களுமே அம்பிகையை வழிபட மிக ஏற்ற நாட்களாகும்.
வேண்டிய வரத்தை வேண்டிய படி பெறுவதற்காக அம்பிகை தவம் செய்வதற்காக தேர்வு செய்த செய்த காலம் இந்த ஆடி மாதமாகும்.
இந்த மாதத்தில் நாமும் வழிபாடு செய்தால், நம்முடைய வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அதை அம்பாள் அப்படியே நிறைவேற்றி வைப்பாள்.
அம்மன் தேர்வு செய்த ஆடி
அம்மன் தவம் செய்து வரம் பெற்ற நாளை ஆடித்தபசு நாளாக நாமும் கொண்டாடுகிறோம்.
இந்த நாளில் அம்மன் தவக்கோலத்தில் காட்சி தருவதையும், வரம் பெற்ற மகிழ்ச்சியில் காட்சி தருவதையும் காண முடியும்.
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி மட்டுமல்ல ஞாயிற்றுக்கிழமையும் அம்பிகையை வழிபட மிக உகந்த நாளாகும்.
ஆடி மாதத்தில் 5 செவ்வாய் கிழமைகள் வருகிறது.
இந்த நாளில் உங்களின் வேண்டுதல், விருப்பம் நிறைவேற அம்பிகையிடம் கோரிக்கை வைத்து, வழிபாடு செய்யலாம்.
செவ்வாய்கிழமை சிறப்பு
செவ்வாய்கிழமை என்பது கடமை திரும்ப அடைப்பதற்கு மிக ஏற்ற நாளாகும்.
கடனை அடைக்க வேண்டும் என்று செவ்வாய்கிழமை ஒரு பத்து ரூபாயை திருப்பி கொடுத்தால் கூட, அந்த கடன் மளமளவென அடைந்து விடும். தீராத கடன் சுமையால் அவதிபடுவோர்.
கடனை அடைக்க வழியே பிறக்க மாட்டேன் என்கிறது என்கிறவர்கள் ஆடி செவ்வாயில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடலாம்.
அம்மன் வழிபாடு என்றாலே பொங்கல் வைப்பது, மாவிளக்கு எடுப்பதும் வழக்கமான ஒன்று தான்.
ஆடி செவ்வாய் வழிபாடு
ஆடி முதல் செவ்வாய் அன்று முடியாதவர்கள் இரண்டாவது செவ்வாய்க்கிழமையில் பொங்கல் வைத்து வழிபடலாம்.
ஆடி மாதத்தின் அனைத்து நாட்களுமே பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவதற்கு மிகவும் ஏற்ற நாட்களாகும்.
இருந்தாலும் கடன் சுமை தீர வேண்டும் என நினைப்பவர்கள் செவ்வாய்கிழமையில் பொங்கல் வைத்து வழிபடலாம்.
விரைவில் கடன்கள் அனைத்தும் அடைந்து, நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும்.
இந்த பொங்கலை போலவே வாழ்க்கையில் இன்பம் பொங்கி, மகிழ்ச்சியும், செல்வமும் நிறைய வேண்டும் என அம்பிகையிடம் பிரார்த்தனை செய்து வழிபடலாம்.