கல்முனையில் நாளை அனுட்டிக்கப்படவுள்ள கருப்பு சித்திரை
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை வலியுறுத்தி நாளை கறுப்பு சித்திரை அனுஷ்டிக்கப்படவுள்ளது.
கல்முனை வடக்குப் பிரதேசத்தை தனியான பிரதேச செயலமாக தரம் உயர்த்தி தருமாறு வலியுறுத்தியும், கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மக்களுக்கு நீதி கோரியும் இன்று(13.04.2024) 20 ஆவது நாளாக மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகிறது
இந்நிலையில் நாளை (14) ஞாயிற்றுக்கிழமை சித்திரை புதுவருட தினத்தை கல்முனை வடக்கு பிரதேச மக்கள் கறுப்பு சித்திரையாக அனுஷ்ட்டித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை வடக்கு பிரதேச சிவில் அமைப்புக்கள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதோடு நாளை ஞாயிறு (14) காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகும்
கறுப்பு சித்திரை அனுஷ்டான நிகழ்வுகளில் காலை 10 மணிக்கு இளைஞர் கழகங்கள்,விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் மோட்டார் சைக்கிள்களின் பவனி இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து பொதுமக்களின் பங்களிப்புடன் கறுப்பு சித்திரை பொங்கல் பொங்குதல் காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளதோடு இவற்றிற்கு மேலதிகமாக பறை இசை போன்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.