பொலிஸ் பரிசோதகரின் விரலை கடித்து எஸ்கேப்!
சோதனையிட சென்ற பொலிஸ் பரிசோதகரின் விரலை கடித்து அருகில் உள்ள கால்வாயில் குதித்து சந்தேகநபர் தப்பிச்சென்றதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
ஈஸி கேஸ் முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஹந்தயா என அழைக்கப்படும் சந்தேகநபரே இவ்வாறு பொலிஸாரின் விரலை கடித்து ஓடியுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கமைய ருவன்வெல்ல அட்டுலுகம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் அருகில் வைத்து சந்தேக நபரை பொலிஸார் வளைத்துள்ளனர்.
தப்பியோடிய சந்தேக நபர் , பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் பட்டியலில் உள்ள ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் . காயமடைந்த பொலிஸ் பரிசோதகர் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர் .