ராஜபக்சாக்கள் இந்தியாவிற்குச் சென்றால் பெரும் ஆபத்து! வெளியானது எச்சரிக்கை
ராஜபக்சர்களை இந்தியா பாதுகாக்க முயற்சித்தால் அந்நாட்டு திறைசேரியை பாதுகாத்துக் கொள்ள நேரிடும் என ஜே.வி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் பிமல் ரட்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சர்களை பாதுகாக்க இந்திய இராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டுமென பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பிமல் ரட்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சர்களை இந்தியா மீட்டுச் சென்றால் அதற்கான செலவுகளையும் இந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்வர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
both Gotabaya and Mahinda Rajapaksha were elected in a free election with thumping majority. How can India allow a mob to overturn such a legitimate election? Then no democratic country in our neighbourhood will be safe. If Rajapaksa wants India’s military help we must give
— Subramanian Swamy (@Swamy39) July 10, 2022
எனினும், அவ்வாறு ராஜபக்சர்களை இந்தியாவிற்கு மீட்டு சென்றதன் பின்னர் அந்நாட்டு திறைசேரியை கவனமாக பார்த்துக்கொள்ள நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்ச இருவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஜனநாயக முறையில் தேர்தல் ஊடாக தெரிவானவர்கள்.
அவ்வாறு இருக்க அவர்களின் ஆட்சியை எவ்வாறு ஒரு கும்பலால் கவிழ்க்க முடியும். அப்படி நடக்குமானால் நமது சுற்றுப்புறத்தில் எந்தவொரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது.
எனவே ராஜபக்சர்களுக்கு தேவைப்பட்டால் இராணுவ உதவிகளை இந்தியா வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுப்ரமணியம் சுவாமி தொடர்ச்சியாக ராஜபக்சர்களுடன் நட்பு ரீதியான உறவை முன்னெடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.