விசேட அதிரடிப்படைக்கு வழங்கப்பட்ட சலுகைகள்!
இலங்கையில் விசேட அதிரடிப் படையின் கீழ் நாடளாவிய ரீதியில் 76 பிரதான முகாங்களும், 23 உப முகாங்களும் 14 விசேட பிரிவுகளும் செயற்பட்டு வருகின்றன.
குறித்த படையணிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகளை மேற்கொள்வதற்கு தற்போதுள்ள 314 மோட்டார் சைகக்கிள்களில் 90சதவீதமானவை 10 வருடங்களுக்கு மேல் பழையவையாக இருக்கின்றமையால் தொடர்ச்சியாக இயந்திரக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

அமைச்சரவை அங்கீகாரம்
இந்நிலைமையால் விசேட அதிரடிப் படையால் மேற்கொள்ளப்படுகின்ற விசேட சுற்றி வளைப்புக்களை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு தடையாக அமைந்துள்ளன.
அதற்கமைய, போதைப்பொருள் தடுப்பு மற்றும் அமைப்பு ரீதியான பாதாள உலகக் குழுக்களை ஒழித்தல் போன்ற கடமைகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் விசேட அதிரடிப் படையணிக்கு 125 cc இயந்திரக் கொள்ளவுடைய 100 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 50 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்யப்படவுள்ளது.'
இதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.