விறுவிறுப்பாக இடம்பெறும் பீகார் சட்டமன்ற தேர்தல்!
இந்தியாவின் பீகார் சட்டமன்ற தேர்தல், கடந்த 6 மற்றும் 11ஆம் திகதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது.
இந்த தேர்தல்களில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தேசிய காங்கிரஸ் கட்சி முன்னிலை
தற்போது பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அதன்படி இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சி 68 இடங்களில் முன்னிலை வகித்து வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.