பிரித்தானியாவின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளில் மிகப் பெரிய தவறுகள்!
கொரோனாவுக்கு எதிரான பிரித்தானிய அரசாங்கத்தின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளில் மிகப் பெரிய தவறுகள் நடந்ததாக இது குறித்து விசாரணை மேற்கொண்ட நாடாமன்றக் குழு தெரிவித்துள்ளது.
குறித்த தவறுகள் நடக்கமால் இருந்திருந்தால், பிரித்தானியாவில் ஏராளமான உயிரிழப்புகள் தவிா்க்கப்பட்டிருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கொரோனா இன்று வரை கற்றக்கொண்ட படிப்பினைகள்' என்ற தலைப்பில் சுகாதார மற்றும் சமூக நலன் தொடா்பான நாடாளுமன்றக் குழு மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரித்தானியாவில் கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் அமைச்சா்கள் மற்றும் அவா்களது அறிவியல் ஆலோசகா்கள் பல்வேறு தவறுகளை செய்தனா். மேலும், உரிய நடவடிக்கைகளை சரியான நேரத்தில் எடுக்காமல் தாமதப்படுத்தினர்.
இது, ஆயிரக்கணக்கான கொரோனா உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்தது. கொரோனாவுக்கு எதிரான பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் பல பெரிய சாதனைகளும் பல பெரிய தவறுகளும் நடைபெற்றுள்ளன.
இனிவரும் காலங்களில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல, பழைய சாதனைகளையும் தவறுகளையும் சீா்தூக்கிப் பாா்க்க வேண்டியது அவசியமாகும்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தைப் பொருத்தவரை, மிகப் பெரிய அளவில் திட்டமிடப்பட்டு மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. தென் கொரியா போன்ற நாடுகளில் கொரோனாவைத் தடுப்பதற்காக மிகத் துரிதமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், பிரித்தானியாவில் அந்த அறிவிப்பை வெளியிடுவதை அரசு தாமதப்படுத்திவிட்டது. மேலும், போதிய அளவுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வதும் கொரோனா நோய்த்தொற்று அபாயமுள்ளவா்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் தாமதம் ஏற்பட்டது.
இந்தத் தாமதத்தைத் தவிா்த்திருந்தால் ஆயிரக்கணக்கான கொரோனா உயிரிழப்புகளைத் தவிா்த்திருக்க முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.