பிக்பாஸ் தமிழ் சீசன் 9; திகதி அறிவிப்பு
பிக்பாஸ் சீசன் 9 பிரமாண்ட தொடக்க விழா அக்டோபர் 5 ஆம் திகதி ஒளிபரப்பாகும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.
ஆரம்பத்தில் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், சீசன் 8 இல் இருந்து நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் பிக்பாஸ் முந்தைய சீசன்களில் ஆரவ், ரித்விகா, முகேன் ராவ், ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன், முகமது அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் முத்துக்குமரன் ஜெகதீசன் ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்த முறை புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதல் விறுவிறுப்பாக்கும் வகையில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.