லாஸ்லியா, தர்சனை தொடர்ந்து பிக்பாஸில் களமிறங்கும் யாழ் யுவதி ! (Photos)
தமிழக மக்கள் மட்டுமல்லாது புலம் பெயர் தமிழர்களும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளும் புது முகங்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
அந்தவகையில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்சன் ஆகியோர் கடந்த பிக்பாஸ் போட்டிகளில் கலந்து கொண்டதன் ஊடாக பிரபல்யமடைந்திருந்தனர்.
அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்துவைத்துள்ளனர். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொகுப்பாளராக பணிபுரிந்துவரும் ஜனனி யூடியூப் இல் பிரபலமானவர் . இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை காண அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.