பிக் பாஸில் இலங்கை பெண் ஜனனிக்கு சிவப்பு கொடி கொடுத்த ஜி.பி முத்து! ஷாக்கான ரசிகர்கள்
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் கடந்த வாரம் சீசன் 6 கோலகலமாக தொடங்கியது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களை சுவராஸ்யமாக தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல்ஹாசன் சீசன் 6யையும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி ஒரு வாரம் ஆகவுள்ள நிலையில் ஆரம்பத்திலிருந்தே வீட்டில் சண்டை, நகைச்சுவை, பாசம் என அனைத்தும் வெளிப்படு வருகின்றது.
கடந்த 5 சீசன்களில் இல்லாத அளவு இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே விருவிருப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வார இறுதி நாட்களாக இன்றைய தினம் (15-10-2022) சனிக்கிழமை கமல்ஹாசன் வருகை தந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
இதன்போது இந்த வாரம் வீட்டில் நியமிக்கபட்ட தலைவர்கள் அவர்களுடைய தலைமைத்துவத்தை எவ்வாறு செய்தார்கள் என சக போட்டியாளர்களிடம் கமல் ஹாசன் பச்சை மற்றும் சிவப்பு கொடியை கொடுத்து செல்லவேண்டும் என ஒரு டாஸ்க் கொடுத்தார்.
அதன்போது ஜனினி தலைமைத்துவத்தை பற்றி அவர்களுடைய குழுவில் இருந்த சக போட்டியாளரான ஜி.பி முத்து கூறும் போது முதலில் அவருக்கும் பச்சை கொடியை கொடுத்து நன்றாக செய்ததாக கூறினர்.
சிறிது நேரத்தில் பச்சை கொடியை ஜனனியிடம் இருந்து வாங்கிக்கொண்டு சிவப்பு கொடியை கொடுத்தார். இதனால் சக போட்டியாளர்கள் உட்பட ரசிகர்கள் அனைவரும் ஒரு நொடி அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் சிவப்பு கொடி கொடுத்ததற்கான விளக்கத்தை நகைச்சுவையாக சொல்லியதால் அனைவரும் சிரித்துவிட்டனர்.