பிக்பாஸில் இலங்கை பெண் ஜனனியை கதறி கதறி அழவைத்த விக்ரமன் - அமுதவாணன்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் திடீரென ஜனனியை விக்ரமன் மற்றும் அமுதவாணன் ஆகிய இருவரும் சேர்ந்து அழ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கில் சரியாக செயல்படாத போட்டியாளர் ஒருவரை காரணத்தோடு தேர்வு செய்யவும் என பிக் பாஸ் கூறுகிறார்.
இதனை அடுத்து இந்த வாரம் சரியாக விளையாடதவர் என விக்ரமன் ஜனனியை கூறுகிறார்.
ஜனனி டிப்ளமாட்டிக் ஆக செயல்படுவதாகவும் விக்ரமன் கூற, அப்போது ஜனனி, ‘நான் அப்படி இல்லை, ஆனால் நீங்கள் அதற்கான காரணத்தை கூறுங்கள் என்று கூறுகிறார்.
அப்போது குறுக்கிட்ட அமுதவாணன் சில கருத்துக்களைச் சொல்ல வந்தார். அப்போது ஜனனி ’நீங்கள் தயவுசெய்து வாக்குவாதம் செய்யாதீர்கள், நீங்கள் என்ன பிரச்சினை என்றாலும் வாக்குவாதம் செய்து கொண்டு இருக்கிறீர்கள்’ என்று கூறிய ஜனனி திடீரென கதறி அழ ஆரம்பித்தார்.
அவரை சக பெண் போட்டியாளர்கள் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இந்த சம்பவத்தின் முழு பின்னணி என்ன என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த நிலையில் இன்று வெளியான புரமோவில் மகேஸ்வரி மற்றும் ஏடிகே ஆகியோர் மோதிக் கொள்கின்றனர்.
ஜனனி தொடர்பில் ஒரு கருத்தை ஏடிகே சொல்ல வந்தபோது மகேஸ்வரி ரியாக்ட் செய்ததற்கு ஏடிகே கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இருவரும் காரசாரமாக மோதிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.