பிக்பாஸில் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து இலங்கை பெண் ஜனனி தப்பித்தாரா?
தமிழில் தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக 44 வது நாளை கடந்து ஓடிக்கொண்டு வருகின்றது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் மத்திரமே உள்ளார்கள்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் இடம்பெற்றன.
போட்டியாளர்கள் 15 பேரும் தமது காரணத்தை கூறி இருவரை நாமினேட் செய்துள்ளனர்.
அந்தவகையில் இந்த வார நாமினேஷனில் சிக்கியவர்களின் பெயர்கள் இதோ...
- தனலட்சுமி
- அசீம்
- ராம்
- மணிகண்டா
- அமுதவானன்
- கதிரவன்
- ராபர்ட்
இதேவேளை இந்த வாரம் நாமினேஷனில் இலங்கை பெண் ஜனனியின் பெயர் வராததால் ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.