ஷூட்டிங்கில் விஜய்யுடன் அதிக நேரத்தை செலவிடும் பிக்பாஸ் ஜனனி!
பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் படம்தான் லியோ.
மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் - லோகேஷ் இணைந்திருப்பதாலும், விக்ரம் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
இப்படம் அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் லியோ படத்தில் பெரிய திரை பிரபலங்கள் மட்டுமின்றி சின்னத்திரை பிரபலங்களும் நடிக்கின்றனர்.
அந்தவகையில் பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்துகொண்ட இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் லியோ படத்தில் நடித்திருக்கிறார்.
அதேவேளை ஜனனி விஜய்யுடன் அதிக நேரம் வரக்கூடிய வகையில் கதாபாத்திரம் லியோவில் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.
அவருக்கான ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்திருக்கிறது.
பிக்பாஸ் மூலம் பல இலட்சக்கணக்கான மக்களின் ஆதரவை பெற்ற ஜனனி விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருக்கும் நிலையில் லியோ படத்தினை பார்ப்பதற்கு ஜனனியின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.