தளபதி விஜய் படத்தில் இணையும் பிக்பாஸ் சீசன் 3யின் முக்கிய பிரபலம்!
மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து தளபதி 67 என்னும் படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்டத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் படம் குறித்த அப்டேட்டுக்கள் அதிகமாக வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
இப்படத்தில் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் விஷால் ஆகியோர் வில்லன் வேடங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக முன்பே தகவல் வெளியாகியிருந்தது.
த்ரிஷா கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க வாய்ப்பு உள்ளது மற்றும் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும் கூறப்பட்டது.
அந்த வகையில் தற்பொழுது நடன இயக்குநரும் பிக்பாஸ் சீசன் 3 இன் போட்டியாளருமான சாண்டியும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
இவர் ஏற்கனவே லோகேஷுடன் விக்ரம்' படத்தில் 'பத்தலா பத்தலா' பாடலுக்காக பணிபுரிந்தார், எனவே இப்படத்திலும் நடன இயக்குநராக பணிபுரிவாரா? அல்லது முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே காணப்படுகின்றது என்பதும் குறுிப்பிடத்தக்கது.