"ஒரு கேம்காக பாசத்தை இழப்பீர்களா"...பிக் பாஸ் வீட்டில் வெடிக்கும் புதிய பிரச்சினை
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது பல சலசலப்புகளை சந்தித்து வருகிறது.
சென்ற வாரம் தான் பிக் பாஸ் வீட்டிலிருந்து அபிஷேக் ராஜா வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் வேகத்தைக் குறைக்க விரும்பாத பிக் பாஸ் தற்போது பெண் போட்டியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்த முயன்று வருகிறது. காயின் டாஸ்கில் தாமரை செல்வியிடம் இருந்த காயினை சுருதி எடுத்து விடுகிறார்.
அதன்போது தாமரை அழுதுகொண்டே ஒரு கேம்காக பாசத்தை இழப்பீர்களா என கேட்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சுருதி தாமரை செல்வியை நோக்கி கை நீட்டி தேவையில்லாத வார்த்தைகள் பேசாதீர் என எச்சரித்துள்ளார்.
விளையாட்டையும் பாசத்தையும் குழப்பிக்கொண்டு வெகுளித்தனமாக இருக்கும் தாமரை செல்வியை பிக் பாஸ் தனது லாபத்திற்காக
பயன்படுத்துவதாக சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.