ஆண்டுகள் மறைந்தும் மாறாத வேதனை ; பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பெரிய வெள்ளி ஆராதனைகள்!(Photos)
கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசுநாதர் இன்றைய தினம் சிலுவையில் அறையப்பட்ட பெரிய வெள்ளி தினத்தில் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெறுகின்றது.
இந் நிலையில், மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆராதணைகள் இடம்பெற்றது.
பலரை பலியெடுத்த தாக்குதல்
ஆராதனையில் பெரும்திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர். கடந்த 2019 ம் ஆண்டு ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகளை ஸாரான் காசிமின் தலைமையிலான ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்பினர் குறிவைத்து தற்கொலை குண்டுதாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததிருந்தனர்.
அதோடு மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 32 பேர் படுகாயமடைந்தனர்.
இதேவேளை, எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிர்த ஞாயிறு தினம் வரையில் தேவாலயங்களில் தொடர்ந்து பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மனங்களில் இன்னும் ஆறாதவேதனையாக அந்த தாக்குதல் சம்பவம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.