சிவகார்த்திகேயன் படத்தில் பிக் பாஸ் பிரபலம் ! வெளியான தகவல்
'பிக் பாஸ் 5' நிகழ்ச்சி சூடுபிடித்து வரும் நிலையில், போட்டியாளர்களில் ஒருவரான ராஜு ஜெயமோகன் சிவகார்த்திகேயன் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் 5' நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தில் சூடுபிடித்து வருவதால், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
18 போட்டியாளர்கள் ஆரம்ப போட்டியாளர்களாக இருந்த நிலையில் , நமீதா மாரிமுத்து மருத்துவ காரணங்களால் வெளியேறியதால் தற்போது 17 பேர் போட்டியில் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற எட்டு பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சீசனில் பெரும்பான்மையான பெண் போட்டியாளர்கள் உள்ளனர். அவர்களில் பாவனி ரெட்டி, பிரியங்கா, இசைவாணி, தாமரை செல்வி மற்றும் ஐக்கி பெர்ரி ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

ஆண் போட்டியாளர்களில் நடிகர் ராஜு ஜெயமோகன் நகைச்சுவையுடன் விளையாடி வருகிறார். இந்நிலையில் , சிவகார்த்திகேயன்-பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள 'டான்' திரைப்படத்தில் ராஜூ ஜெயமோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
இந்த படம் 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர எஸ்.ஜே.சூர்யா, பால சரவணன், காளி வெங்கட், முனீஸ்காந்த் மற்றும் சிவாங்கி ஆகியோரும் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதேவேளை ராஜூ ஜெயமோகன் 2012-ல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கானா காணும் காலங்கள்' என்ற சீரியலில் நடித்தார். அதன் பின்னர் ’கல்லுாரி சாலை ', 'ஆண்டாள் அழகர்', 'சரவணன் மீனாட்சி' மற்றும் 'பாரதி கண்ணம்மா' போன்ற பல சீரியல்களிலும் ராஜூ நடித்தார்.
மேலும் 2019-ஆம் ஆண்டு கவின் மற்றும் அருண்ராஜா காமராஜின் நெருங்கிய நண்பராக 'நட்புனா என்னனு தெரியுமா' படத்தில் நடித்து பெரிய திரையில் ராஜு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.