திடீரென கணவர் பெயரை நீக்கிய பிக்பாஸ் அபிநய் மனைவி; குழப்பத்தில் ரசிகர்கள்
பிக்பாஸ் பிரபலம் அபிநய் மனைவி திடீரென கணவர் பெயரை நீக்கியதால் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்கள் வெற்றிக்கரமாக முடிந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது.
கடந்த அக்டோபர் 3 ஆம் திகதி பிக்பாஸின் 5-ஆம் சீசன் கோலாகலமாக ஆரம்பித்த நிலையில் தற்போது நிகழ்ச்சி இறுதிக்கட்டதை நெருங்கியுள்ளது. 20 போட்டியாளர்கள் பங்குகொண்ட நிகழ்ச்சியில் தற்போது 8போட்டியாளர்களே இருந்த நிலையில் கடந்த வாரம் சஞ்சீவ் வெளியேறினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் ஒரு காதல் கதை இருந்துவிடும் , அந்தவகையில் இந்த சீசனில் பங்கேற்றுள்ள பெரும்பாலானோர் திருமணம் ஆனவர்களாக உள்ளனர். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அக்ஸரா – வருண் இருவருக்கும் ஒரு கெமிஸ்ட்ரி சென்று கொண்டு தான் இருந்தது.
ஆனால் , தற்போது சர்ச்சையை கிளப்பியது அபிநய் – பாவ்னி நெருக்கம் தான்.. அபிநய், உள்ளே இருந்த வரை பாவ்னியிடம் தான் அதிக நெருக்கம் காட்டி வந்தார். மேலும், அவரிடம் இவர் லெட்டர் எழுதி கொடுத்ததாக பாவ்னி கூறியதில் இருந்தே இவரது பெயர் டேமேஜ் ஆனது.
இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார் அபிநய். அப்போது பாவ்னியின் குற்றச்சாற்றிக்கு உங்கள் மனைவி என்ன சொன்னார் என கேட்டிருந்ததற்கு பதில் அளித்த அபிநய்,
எல்லா மனைவிமார்களை போலதான் அவரும் ரியாக்ட் செய்தார். ஆனால், நமக்குள் நடக்கும் விஷயத்தை எப்படி நீங்கள் கையாளுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். இறுதியில் குடும்பம்தான் அனைத்தும்’ என்று பதிவிட்டு இருந்தார்.
இவ்வாறான நிலையில் அபிநைய்யின் மனைவி அபர்ணா, தன்னுடைய பெயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாற்றி இருக்கிறார்.
இதற்கு முன் வரை அபர்ணா அபிநய் எனபெயர் வைத்து இருந்த இவர் தற்போது அபிநைய் பெயரை நீக்கிவிட்டு அபர்ணா வரதராஜன் என்று மாற்றி உள்ளமை ரசிகர்களிடையே குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.