அனுர அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் பியூமி ஹன்சமாலி
தரமற்ற கிரீம்களை ஒருபோதும் நான் விற்க மாட்டேன் என்றும் முடிந்தால் அவற்றை நிருபித்து காட்டுமாறும் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி சவால் விடுத்துள்ளார்.
எனது தாயும், மகனும் அதே கிரீம்களைப் பயன்படுத்துவதாகவும், இன்றுவரை தனது தாயோ அல்லது மகனோ அவற்றால் எந்த பக்க விளைவுகளையும் அனுபவிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருப்புப் பணமோ போதைப்பொருள் பணமோ இல்லை
முடிந்தால், நான் தரமற்ற கிரீம்களைத் தான் விற்பனை செய்கிறேன் என்பதை நிரூபிக்கமாறு வெளிப்படையான சவாலையும் விடுத்துள்ளார்.
சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை மறைப்பதற்காக சில குழுக்கள் தன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும், தான் எப்படி பணம் சம்பாதித்தேன் என்பதை நிரூபிக்க வேண்டிய இடத்தில் நிரூபித்ததாகவும் கூறியுள்ளார்.
தன்னிடம் கருப்புப் பணமோ அல்லது போதைப்பொருள் பணமோ இல்லை என்றும், தான் பயன்படுத்தி வந்த காரை தனது தோழியின் கணவருக்கு அவர் ஒரு போதைப்பொருள் வியாபாரி என்பதை அறியாமலேயே விற்றுவிட்டதாகவும், இது தொடர்பில் சிலர் தன் மீது குற்றம் சாட்டுவதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், பியுமி ஹன்சமாலியின் கிரீம்களை வாங்கியவர்கள் அழைக்கப்பட்டு மேலும் வாக்குமூலங்கள் எடுக்கப்படும் என்று சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.