குச்சவெளியில் பிக்கு அட்டகாசம்; புதிய ஜனாதிபதியிடம் மக்கள் கோரிக்கை
திருகோணமலை குச்சவெளி மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள் நிலம் என பிக்கு ஒருவர் கூறி வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியிலாவது இதற்கு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரம்பரையாக வயற்செய்கை
திருகோணமலை திரியாய்க் கிராமத்தின் பூர்விக வயல் நிலங்களில் முக்கிய வயல் வெளிகளான வளத்தாமரை, ஆதிக்காடு, ஒட்டுப்புல்மோட்டை, நீராவிக்கண்டல் மற்றும் வேடன்குளம் என உள்ளடக்கிய வயல் வெளிகளில் மக்கள் பரம்பரை பரம்பரையாக வயற்செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் புல்மோட்டை அரிசிமலைப் பிக்கு அடாவடியாக கையகப்படுத்தப்பட்ட 88 ஏக்கர் பொதுமக்களின் உறுதிக் காணியில் விவசாயம் மேற்கொள்ள பாரிய சிரமத்தை மக்கள் எதிர்கொள்கின்றனர்.
வருடா வருடம் பெரும் போக வயற்செய்கையின் போதும் பிக்கு நெருக்கடி கொடுப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.