வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு ; வடக்கு, கிழக்கில் இன்று முதல் மழை

Galle Nuwara Eliya University of Jaffna Weather
By Sahana Sep 04, 2025 04:38 AM GMT
Report

தற்பொழுது வடக்கு, வடமேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளதால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு இன்று முதல் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை அவ்வப்போதும் மிதமான மழை கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

யாழில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

யாழில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

வானிலை தொடர்பில் அவர் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் குறிப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டுக்கான வடகீழ்ப் பருவக்காற்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இவ்வாண்டு வடகீழ்ப் பருவக்காற்று மழை சராசரியை அண்மித்ததாகவே காணப்படும். குறிப்பாக 500 மி.மீ. முதல் 600 மி. மீ. இற்கு இடைப்பட்ட அளவிலேயே மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு ; வடக்கு, கிழக்கில் இன்று முதல் மழை | Bengal Rains To Begin In The North And East Today

இவ்வாண்டு 5க்கு மேற்பட்ட தாழமுக்க நிகழ்வுகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதில் நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியிலும் இறுதிப்பகுதியிலும் தோன்றும் தாழமுக்கங்கள் தீவிர தாழமுக்கங்களாகவோ அல்லது புயல்களாகவோ மாறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

அதேபோன்று டிசம்பர் மாதத்தில் தோன்றுகின்ற தாழமுக்கமும் தீவிரமான தாழமுக்கமாக அல்லது புயலாக மாறுவதற்கான வாய்ப்புகளை கொண்டிருக்கின்றது.

இவ்வாண்டு வடகீழ்ப் பருவக்காற்று காலத்தில் சராசரியை அண்மித்த அல்லது அதற்கு சற்றுக் கூடுதலான மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும் பெருமளவுக்கு மழை நாட்கள் செறிவான மழைவீழ்ச்சியைக் கொண்டதாகவே அமைந்திருக்கும்.

இதனால் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புகள் இம்முறையும் காணப்படுகிறது. நவம்பர் மாதம் ஐந்தாம் திகதியில் இருந்து நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு இடையிடையில் இவ்வாண்டின் வடகீழ்ப் பருவக்காற்று மழையின் 60 வீதமான மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு ; வடக்கு, கிழக்கில் இன்று முதல் மழை | Bengal Rains To Begin In The North And East Today

ஒக்டோபர் மாதம் 20 ம் திகதிக்கு பின்னர் வடகீழ்ப் பருவக்காற்று மழை படிப்படியாக தீவிரம் பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை இன்று நண்பகல் 12.09 அளவில் ராகம, கிரிந்திவெல, ருவன்வெல்ல, நாவலப்பிட்டி மற்றும் லுணுகல ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு ; வடக்கு, கிழக்கில் இன்று முதல் மழை | Bengal Rains To Begin In The North And East Today

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

போலி இலக்க தகடுடன் காரை ஓட்டிய பெண் வைத்தியர் கைது

போலி இலக்க தகடுடன் காரை ஓட்டிய பெண் வைத்தியர் கைது

சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மன்னாரிலிருந்து காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக வாகரை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கையொப்பப் போராட்டம் ; ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கட்சிகள் அழைப்பு

மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கையொப்பப் போராட்டம் ; ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கட்சிகள் அழைப்பு

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US