தினமும் காலையில் 2 கிராம்பை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மென்று வரும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கும். சுவாசத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுக்கூடியது
இப்போது தினமும் காலையில் 2 கிராம்பை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதை நாம் இங்கு பார்ப்போம்.

வாய்வழி ஆரோக்கியம் மேம்படும்
கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளுள் ஒன்று தான் வாய் புத்துணர்ச்சியுடன் துர்நாற்றமின்றி இருக்கும். ஏனெனில் இதில் யூஜெனோல் என்னும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது வாய் துர்நாற்றத்திற்கு காரணமான கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்தைப் போக்குவதோடு, ஈறு தொற்றுகளையும் போக்கும். என்ன தான் கிராம்பு வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவினாலும், தினசரி பற்களை துலக்குவது, ஃப்ளோசிங் செய்வது போன்றவற்றை தவிர்க்கக்கூடாது.
செரிமானம் மேம்படும்
பல நூற்றாண்டுகளாக செரிமான பிரச்சனைகளை போக்க கிராம்பு பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிராம்பில் உள்ள மருத்துவ பண்புகள் செரிமான நொதிகளை தூண்டவும், உண்ட உணவுகளை திறம்பட உடைக்கவும் உதவுகிறது. முக்கியமாக இதில் உள்ள யூஜேனோல் வயிற்றுப் புறணியைப் பாதுகாக்கவும், இரைப்பை புண்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதால் விலங்குகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மனித ஆய்வுகள் தேவைப்பட்டாலும், சீரான உணவில் கிராம்பை சேர்ப்பது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
கிராம்பு இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள ஆதரிப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன. மேலும் சில சிறிய மனித ஆய்வுகள் மற்றும் விலங்கு ஆராய்ச்சிகள், கிராம்பில் உள்ள சேர்மங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, உணவுக்குப் பிந்தைய இரத்த சர்க்கரை அதிகரிப்புகளைக் குறைக்கக்கூடும் என்று குறிப்பிடுகின்றன.
அழற்சியை எதிர்த்துப் போராட உதவும்
நாள்பட்ட அழற்சியானது ஆர்த்ரிடிஸ், இதய நோய், வளர்சிதை மாற்ற கோளாறுகளுடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுலும் இதில் உள்ள யூஜெனோல் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளது. பல ஆய்வுகள் முழு கிராம்புகளுக்குப் பதிலாக செறிவூட்டப்பட்ட கிராம்புச் சாறுகளைப் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அழற்சி எதிர்ப்பு டயட்டில் கிராம்பைச் சேர்ப்பது மிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும்.
