புதன் கிழமைகளில் காயத்திரி மந்திரத்தை சொன்னால் கிடைக்கும் நற்பலன்கள்!
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என சொல்வார்கள். அப்படிப்பட்ட புதன் கிழமையில் புதன் பகவானை வழிபாடு செய்துவந்தால் தொழிலில் உயரலாம் என்பது நம்பிக்கை.
புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த வலிமை மிக்கது என்றும் வாழ்வில் அனைத்து விதமான முன்னேற்றங்களையும் அடையலாம் என்றும் ஆச்சாரியார்கள் கூறுகின்றனர். புதன் கிழமைகளில் புதன் பகவானுக்கான காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால் நரம்பு கோளாறுகள் நீங்கும்.
காரணம், நவக்கிரகங்களில் நரம்பு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்துவது புதன் பகவானாகும். எனவே புதன் பக்வானை நரம்புகள் புத்துணர்ச்சி பெறுவதோடு, கல்வியிலும் சிறந்து விளங்கலாம்.
மந்திரம்:
ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத : பிரசோதயாத்
இந்த மந்திரத்தை புதன் கிழமைகளில் கோவில்களிலுள்ள புதன் பகவான் சந்நிதியிலோ அல்லது நம் இல்லத்திலோ நல்லெண்ணெய் தீபமேற்றி பச்சைப்பயிர்களால் ஆன உணவை நைவேத்தியமாய் படைத்து கற்பூர தீபம் காட்டி மேற்காணும் மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.
பரிகாரங்கள்:
புதன் பகவானின் முழுமையான நல்லருளைப் பெறுவதற்கு ஏதேனும் ஒரு புதன் கிழமை அன்று தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திருவெண்காடு கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
அதன் பிறகு அங்கிருக்கும் நவக்கிரக சந்நிதியில் புதன் பகவானுக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து, பச்சை நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த பரிகார வழிபாட்டை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ செய்வது புதன் பகவானின் அருளைப் பெற்றுத்தரும்.
இந்த கோவிலுக்கு நேரில் செல்ல இயலாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சிவன் கோவிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதியில் புதன் கிழமைகள் தோறும் காலை 8 மணிக்குள்ளாக சென்று புதன் பகவானுக்கு சிறிது பச்சை பயிறு பருப்புகளை சமர்ப்பித்து, நெய் தீபமேற்றி, புதன் பகவானின் காயத்ரி மந்திரங்களை 108 முறை துதித்து வழிபட வேண்டும்.
இந்த பரிகாரத்தை 9 வாரங்கள் முதல் 27 வாரங்கள் வரை செய்வதால் மட்டுமே புதன் பகவானின் முழுமையான அருளைப் பெற முடியும் எனவும் சொலப்படுகின்றது.