காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா?
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 கிளாஸ் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். லிட்டரில் சொன்னால் குறைந்தபட்சமாக 2.50 லிட்டர் முதல் 4 லிட்டர் வரை குடிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
அதில் மாலை வேளையில் அதிகமாக குடிப்பதை விட முன்பகலில் தான் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். அதிலும் காலை எழுந்ததும் தண்ணீர் குடிக்க வேண்டும்.
காலையில் எழுந்ததும் வாயில் இருந்து பலருக்கும் துர்நாற்றம் வீசும். அதற்கு காரணம் என்ன தெரியுமா?
நம்முடைய வாயில் இரவு நேரத்தில் உமிழ்நீர் சுரப்பு குறைந்து விடும். அதனால் வாய் அதிகமாக வறட்சி அடையும். இதுதான் வாய் துர்நாற்றம் உண்டாவதற்கு முக்கியக் காரணம்.
காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன்பாக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்னவென நாம் இங்கு பார்ப்போம்.
நீரிழப்பை சீர்செய்யும்
இரவு தூக்கதின்போது உடல் செயல்பாட்டுக்கு தண்ணீர் தேவைப்படும். ஆனால் இரவில் நாம் தண்ணீரில் குடிக்க மாட்டோம். அதனால் உடலில் இருக்கும் தண்ணீர் குறையும். அதனால் காலையில் உடல் நீரிழப்போடு இருக்கும். எழுந்ததும் தண்ணீர் குடிக்கும்போது நீரிழப்பு ஏற்படுவதை தடுக்கும்.
வாய் புத்துணர்ச்சி
எழுந்ததும் தண்ணீர் குடிக்கும்போது வாயில் உள்ள துர்நாற்றத்தை நீக்கி வாய் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
செரிமான ஆற்றல்
இரவில் குடலில் அமிலத்தன்மை அதிகமாக சுரந்து இருக்கும். இந்த அமிலத்தன்மையை குறைத்து நீர்க்கச்செய்து அஜீரணத்தைக் குறைத்து ஜீரண ஆற்றலை அதிகரிக்கும்.
சரும ஆரோக்கியம்
காலை எழுந்ததும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீங்களோ அவ்வளவு ஸ்கின்னுக்கு நல்லது. உடல் கழிவுகளை நீக்கி ஸ்கின்னை பளபளப்பாக வைத்திருக்கும்.
நோயெதிர்ப்பு ஆற்றல்
பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையும். இதை தொடர்ந்து செய்யும்போது சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை வருவதைக் கட்டுப்படுத்தும்.