இரவில் அடிக்கடி பசி வருமா? அப்போ இந்த கிராம்பை பயன்படுத்துங்கள்
கிராம்பு உடலுக்கு எல்லா வகையிலும் நன்மை பயக்கும். இதனை இரவில் சாப்பிட்டால் அது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
கிராம்பில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமநிலைப்படும். இதுதவிர இன்னும் சில நன்மைகளும் இருகின்றன.
கிராம்புகளை இரவில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
வீக்கம் போய்விடும்
கிராம்பு அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக வீக்கம் அல்லது வலி உள்ளவர்கள் தாராளமாக கிராம்புகளை உட்கொள்ளலாம். பல்வலி அல்லது உடலின் எந்தப் பகுதியிலும் வலி உள்ளவர்களும் இரவில் கிராம்புகளை உட்கொள்ளலாம்.
பசியை போக்கும்
சிலருக்கு இரவில் சாப்பிட ஆசை இருக்கும். அத்தகைய சூழ்நிலையில் கிராம்பு மூலம் பசியை போக்கலாம்.
இதனை பாலில் சேர்த்தும் குடிக்கலாம் அல்லது நேரடியாகவும் சாப்பிடலாம். இப்படி உட்கொள்ளும்போது இரவில் உணவின் மீது ஆசை இருக்காது.
இருமலுக்கு நிவாரணம்
கிராம்பை வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து சாப்பிட்டு வர சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் குணமாகும்.
அதே நேரத்தில் கிராம்பு மற்றும் தேன் கலவையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகள் உள்ளன அதனால் இந்த கலவை உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும்.
கிராம்புகளை இவ்வாறு பயன்படுத்தவும்
கிராம்பு பொடியை காய்கறிகள், ரொட்டி, சாலட் ஆகியவற்றில் கலந்து சாப்பிடலாம்.
கிராம்பு பொடியை பாலில் கலந்து சாப்பிடலாம்.