மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்
கிண்ணியா பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
கிண்ணியா பிரதேசத்தில் செயலகப் பிரிவுக்குட்பட்ட கண்டல்காடு கிராமத்தில் இன்று (11) காலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அந் நபர் கிண்ணியா தள வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளானவர்
கிண்ணியா மகாமாறு பகுதியைச் சேர்ந்த ஆசுதீன் அன்சார் என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் கண்டல்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள மகாவலி கங்கை கொட்டியாரகுடாவில் மீன்பிடிக்க சென்ற போதே தாக்குதலுக்கு உள்ளானகி உள்ளதாக கூறப்படுகின்றது.
அத்தோடு அவர் சென்ற மோட்டார் சைக்கிளும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.