தமிழர் பகுதியொன்றில் குடும்பஸ்தரை பலியெடுத்த கோர விபத்து ; துயரில் கதறும் குடும்பம்
வவுனியா - கனகராயன்குளம், கொல்லர்புளியங்குளம் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
பொலிசார் விசாரணை
யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த கென்ரர் ரக வாகனம் கொல்லர்புளியங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபருடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த 61 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக கனகராஜன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.