1கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பீடி இலைகள் பறிமுதல்
இந்தியாவின் திருச்செந்தூரிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒரு கோடிக்கும் அதிகமான பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 2.4 மெற்றிக்டன் பீடி இலைகள் திருச்செந்தூர் கியூ பிரிவு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருச்செந்தூருக்கு அருகே உள்ள கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் பீடி இலைகள் கொண்டு செல்லப்படுவதாக தூத்துக்குடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது, 990 கிலோகிராம் வெட்டப்பட்ட பீடி இலைகளும், ஆயிரத்து 470 கிலோகிராம் முழு பீடி இலைகளும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு உந்துருளிகளும் மீட்கப்பட்டுள்ளன.