உணவு தேடி பொலிஸ் வாகனத்தின் கார் கதவை உடைக்க முயன்ற கரடி... வீடியோ வைரல்!
உணவு தேடி சாலைக்கு வந்த கரடி ஒன்று சிற்றுண்டிக்காக அங்கு நிறுத்தப்பட்டிருந்த, ஒரு பொலிஸ் வாகனத்தின் கார் கதவை உடைக்க முயன்ற காணொளி இணையத்தில் பரவி வருகிறது.
இச்சம்பவம் அமெரிக்காவில் உள்ள புளோரிடா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த காணொளியில், கரடி சிற்றுண்டியை தேடி அங்கு நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனத்தை நெருங்குகிறது. பின்னர் அந்த கரடி வாயால் கார் கதவை திறக்க முயல்கிறது.
மேலும், கால் பாதங்களால் காரின் கதவை திறக்க முயற்சிப்பதை காண முடிகிறது. இருப்பினும் அதன் முயற்சி பலனளிக்கவில்லை. கார் கதவு பூட்டப்பட்டிந்ததால் கரடியால் திறக்க முடியவில்லை.
இந்த காணொளி இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலான நிலையில், பயனர்கள் பலரும் வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் வருவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.