முதலைகளால் அச்சத்தின் பிடியில் மட்டக்களப்பு மக்கள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரசேத்திலுள்ள வெல்லாவெளி, கோவில்போரதீவு, பொறுகாமம், ஆகிய பல பகுதிகளில் காணப்படும் கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுகின்றது.

அதேசமயம் கடந்த காலங்களிலும் அக் குளங்களில் இவ்வாறு முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதனால் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடு, மாடுகளை முதலைகள் வேட்டையாடிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் அப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேற்ப்பதற்காகச் செல்பவர்களும், தமது கால்நடைகள் விடையத்திலும் மிகவும் அவதானத்துன் நடமாடுமாறு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.