மட்டக்களப்பில் இலஞ்சம் வாங்கிய இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி!

Sri Lanka Police Batticaloa Bribery Commission Sri Lanka
By Shankar Sep 26, 2024 06:35 PM GMT
Shankar

Shankar

Report

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பகுதியில் மணல் வியாபாரி ஒருவரிடம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் விசேட புலனாய்வு பிரவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளை கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்றையதினம் (26-09-2024) உத்தரவிட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் இலஞ்சம் வாங்கிய இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி! | Batticaloa Police Officers Taking Bribes Remanded

கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிவரும் விசேட புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவர் மணல் வியாபாரி ஒருவரிடம் நீண்ட நாட்களாக இலஞ்சமாக பணம் வாங்கிவந்துள்ள நிலையில் குறித்த மணல் வியாபாரி இது தொடர்பாக கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு தெரிவித்தார்.

பாடசாலை வைபவங்களுக்கு அரசியல்வாதிகளை அழைக்கும் சம்பிரதாயத்திற்கு முற்றுப்புள்ளி!

பாடசாலை வைபவங்களுக்கு அரசியல்வாதிகளை அழைக்கும் சம்பிரதாயத்திற்கு முற்றுப்புள்ளி!

இதனைத்தொடர்ந்து இலஞ்ச ஊழல் ஒழுப்பு ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான நேற்று புதன்கிழமை (25) பிற்பகல் கொக்கட்டிச்சோலை நகர்பகுதியில் உள்ள வீதியில் மாறுவேடத்தில் இலஞ்ச ஊழல் ஒழுப்பு பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பில் இலஞ்சம் வாங்கிய இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி! | Batticaloa Police Officers Taking Bribes Remanded

இதன் போது அங்கு சென்ற விசேட புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவர் குறித்த மண் வியாபாரியிடம் இலஞ்சமாக 2 ஆயிரம் ரூபாவை வாங்கும் போது மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

நள்ளிரவு முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறை!

நள்ளிரவு முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறை!

இதில் கைது செய்யப்பட்ட பொலிஸ் விசேட புலானர்வு பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட்டும், கான்ஸ்டபிளும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது இருவரையம் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் இவர்களுக்கு எதிராக வழக்கை கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் பதிவு செய்து ஆஜர்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.  

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US