ட்ரம்பின் சர்ச்சையான நிலைப்பாடு ; அமைதி ஒப்பந்தத்தில் லெபனான் உள்வாங்கப்படவில்லை
ஈரானுடனான இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பு காரணமாகவே லெபனான் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்றும், அந்த அமைப்பு மீதான தாக்குதல் தொடரும் என ட்ரம்ப் கூறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து கேட்கப்பட்ட போது, அதனை ஒரு தனிப்பட்ட சிறு மோதல் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருவதன் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரசீக வளைகுடா பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை செய்தியை அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் கடல் பகுதியில் உள்ள அனைத்து கப்பல்களின் கவனத்திற்கு இந்த நீரிணை வழியாகப் பயணம் செய்ய வேண்டுமானால் நீங்கள் IRGC-இடம் அனுமதி பெற வேண்டும்.
இந்த கடல் பகுதிக்குள் நுழைய முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் இலக்கு வைக்கப்பட்டு அழிக்கப்படும். சர்வதேச கடல்சார் எச்சரிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் வானொலி அலைவரிசை ஊடாக இந்தக் கட்டளையை கப்பல் பணியாளர்கள் கேட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.