முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரின் குளியலறையில் தில்லாலங்கடி வேலை
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரின் விடுதி மற்றும் அலுவலகத்தின் குளியலறையிலிருந்து டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது நேற்றையதினம் (31-07-2022) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நீண்ட நாட்களாக வராததால் அப்பொதுமக்கள் நாட்கணக்கில் காத்திருந்துள்ளனர்.
இந்த நிலையில், பிரதேச செயலக வாகனம் எரிபொருள் நிரப்பு நிலையகத்திற்கு வந்து டீசல் பெற்றபோது கொள்கலன்ளில் பெற்றோல் நிரப்பப்பட்டு வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
இதனை நபர் ஒருவர் காணொளி எடுத்து முகநூலில் பதிவிட்டதைத் தொடர்ந்து அதிகளவானோர் தனது விசனத்தை தெரிவித்து வந்துள்ளனர்.
இதை தொடர்ந்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசியதகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அலுவலக களஞ்சியசாலையிலிருந்தும் 110 லீற்றர் டீசல், 10 லீற்றர் பெற்றோல், 4 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டன.
பிரதேச செயலாளருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிவான் நிதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.