மட்டக்களப்பில் பதறும் கோட்டாவின் பினாமிகள்!!
பல பில்லியன் டொர்களை மொசடி செய்து, நாட்டையே சூறையாடி குற்றச்சாட்டின் பெயரில் இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) மக்களால் விரட்டியடிக்கப்பட்ட நிலையில், ராஜபக்சக்களின் பினாமிகள் செய்வதறியாது திகைத்து நிற்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
பல்வேறு வகைகளிலும் ராஜபக்சக்களால் கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் சொத்துக்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் 'பினாமிகள்' பெயரில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், இலங்கையின் உள்நாட்டில் ராஜபக்சக்களின் பினாமிகள் பற்றிய தகவல்கள் முன்னிலை சோசலிசக் கட்சி இளைஞர்களால் திரட்டப்பட்டுவருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக பசில் ராஜபக்சவின் பினாமி என்று நம்பப்படுகின்ற மட்டக்களப்பு வர்த்தகர் ஒருவர் தனது கவலையை நேற்றைய தினம் தனது நன்பர்களிடம் வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் நட்சத்திர அந்தஸ்துள்ள விடுதிகள், பெற்றோல் நிலையங்கள் என்று பசிலின் பல மில்லியன் ரூபாய் முதலீடுகளை தனது பெயரில் வைத்துள்ள ஒரு தமிழ் வர்த்தகர், தனது விடுதியில் வைத்து தனது நன்பர்களிடம் கதறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
'எனது பெயரில் பசில் மாத்தையா முதலீடு செய்துள்ள சொத்துக்களை முன்னிலை சோசலிசக் கட்சியினரிடமோ அல்லது புதிய அரசாங்கத்திடமோ ஒப்படைப்பது பற்றி எனக்குக் கவலையில்லை.. ஆனால் எனது சொந்த உழைப்பையும் அபகரித்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது' என்று அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக ராஜபசக்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை முன்நின்று வெற்றிகரமாகவும், நேரத்தியாகவும் நடாத்திக்கொண்டிருக்கின்ற முன்னிலை சோசலிசக் கட்சி என்ற அமைப்பு ராஜபச்சக்களின் உள்ளூர் முதலீடுகள் பற்றிய தகவல்களைத் திரட்டி வருவதாகவும், குறிப்பாக ராஜபக்சக்களின் பினாமிகளிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்து நாட்டின் பட்டினிக்கு எதிராக அவற்றினைப் பயன்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பைச் சேர்ந்த பசிலின் முக்கிய பினாமியான 'செல்வந்தரான' அந்த 'ராஜன்' பெயரும் முன்னிலை சோசலிசக் கட்சியினரால் விசாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற நிலையில், அவர் அச்சம் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.