யாழில் பொலிஸ் அதிகாரியை இடமாற்றம் தொடர்பில் பொதுமக்கள் பெயரில் பதாகைகள்
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என அந்தப் பகுதிகளில் பொதுமக்கள் பெயரில் பதாகைகள் கட்டப்பட்டுள்ளன.
கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வெதகெதர கடந்த மூன்றாண்டுகளுக்கு முதல் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார்.
தமிழ் மொழி பேச கூடியவராக இருந்தமையால் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வாழும் தமிழ் மக்கள் இவரை இலகுவில் அணுக கூடியவாறு இருந்தது.
அத்தோடு, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குற்றச்செயல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படிருந்தன.
இந்நிலையில், பொறுப்பதிகாரிக்கு, பதுளைக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதிகளில் தமிழ் மொழி பேசக்கூடிய பொலிஸ் அதிகாரிகள் கடமையாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வரும் நிலையில் , தமிழ் மொழி பேசக்கூடிய பொறுப்பதிகாரி திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த பதாகைகள் கட்டப்பட்டுள்ளன.