உடல் எடையை குறைக்கும் வாழைப்பழம்
உடல் எடை குறைப்பில் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது, இதில் கலோரிகள் குறைவாக உள்ளது.
வாழைப்பழத்தில் அதிகளவு நார்சத்து இருப்பதால் இதனை உண்டதும் நிறைவான உணர்வு ஏற்படும். அதிலும் பழுக்காத வாழைப்பழங்களில் நோயெதிர்ப்பு தன்மை அதிகமுள்ளது.
சத்துக்கள்
வாழைப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு, போலேட், நியாசின், ரிபோஃபிளேவின் மற்றும் பி6 போன்ற வைட்டமின்களும், தாதுக்களும், அதிகளவு ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளது. இவை உடல் செயல்பாட்டிற்கு போதுமான ஆற்றலை தருகிறது.
பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்டுகள் உள்ளது. அதில் குறிப்பாக வாழைப்பழத்தில் ஏராளமான ஆன்டி ஆக்சிடண்டுகள் நிரம்பியுள்ளது.
இதனை சாப்பிடுவதால் இதய சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் பல்வேறு விதமான நோய்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.
உயர் ரத்த அழுத்த பிரச்னையை குறைப்பதில் வாழைப்பழம் முக்கிய பங்கினை வகிப்பதாக கூறப்படுகிறது, வாழைப்பழத்தில் குறிஅவன உப்புக்களும், அதிகளவு பொட்டாசிய சத்தும் நிறைந்துள்ளது.
பொட்டாசிய சத்து தான் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான மூலமாகும், அந்த சத்து வாழைப்பழத்தில் அதிகமாக இருப்பதால் இதனை சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராது.